எப்போது தேர்தல் நடந்தாலுமே சுகாதார நடைமுறை அவசியம் – தேர்தல் ஆணைக்குழுவிடம் ஓரிரு நாட்களில் அறிக்கை கையளிப்பு

பொதுத்தேர்தலை நடத்தும்போது பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பான பரிந்துரை அறிக்கை இன்னும் ஓரிரு நாள்களில் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தல் ஜூன் 20 ஆம் திகதி நடத்தப்பட்டாலோ அல்லது 6 மாதங்களுக்கு பின்னர் நடத்தப்பட்டாலோ நிச்சயம் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“தனியாள் இடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல் உட்பட மேலும் பல நடைமுறைகள் பரிந்துரை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பது எனது பொறுப்பு அல்ல. அது தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கான பணியாகும். எனினும், எந்தத் திகதியில் தேர்தல் நடத்தப்பட்டாலும் இந்த சுகாதார நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்பது கட்டாயம்.

தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இரண்டு தடவைகள் பேச்சு நடத்தியுள்ளனர். இதன்பிரகாரம் மூவர் அடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டே சுகாதார நடைமுறைகள் அடங்கிய பரிந்துரை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.