முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சர்வதேச ரீதியில் கடைப்பிடிப்பு!
பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் உயிர்களை காவுகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 ஆம் திகதி பல்வேறு ஒளி, ஒலி அலை தொழிநுட்பம் மூலம் உலகளாவிய ரீதியில் நினைவேந்தப்படவுள்ளது.
ஐக்கிய அமெரிக்க தமிழர் செயற்பாட்டு குழு, பிரித்தானிய தமிழர் பேரவை, கனடிய தமிழர் பேரவை, ஆஸ்திரேலிய தமிழர் பேரவை, அயர்லாந்து தமிழர் பேரவை, அமைதிக்கும் நீதிக்குமான ஒற்றுமை குழு – தென்னாபிரிக்கா ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வை நடத்தவுள்ளன.
இரண்டு மணித்தியாலங்கள் வரை நீடிக்கும் இந்த நேரடி நிகழ்வு ஐக்கிய இராச்சியத்திலும், அயர்லாந்திலும் மே 18ஆம் திகதி சரியாக மாலை 5 மணிக்கும், ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடாவில் நண்பகல் 12 மணிக்கும், ஆஸ்திரேலியா சிட்னியில் மே 19 ஆம் திகதி அதிகாலை 2 மணிக்கும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை