ரட்ண ஜீவன் ஹுலிடம் 500 மில்லியன் நட்டஈடு கோருகின்றார் அங்கஜன் இராமநாதன்
பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலிடமிருந்து 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் கடிதம் அனுப்பியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல், பேரிடர் முகாமைத்துவ நிலையத்தால் வழங்கப்பட்ட நிவாரணத்தை யாழ்ப்பாண மாவட்ட செயலர், அங்கஜன் இராமநாதனிடம் கொடுத்தார், என தெரிவித்திருந்தார்.
அது மறுநாள் யாழில் இருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது. அந் நிலையிலையே , தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினார் என பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலிடமிருந்து 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி அங்கஜன் இராமநாதன் கடிதம் அனுப்பியுள்ளார்.
இரண்டு கிழமைகளுக்குள் பதிலளிக்காவிடில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை இந்த செய்தியுடன் , “நிவாரணத்தை ஆட்டையை போட்ட அரசியல்வாதி” என தலைப்பு செய்தி ஒன்றினையும் குறித்த பத்திரிகை வெளியிட்டு இருந்தது.
அந்த செய்திக்கு எதிராகவும் அங்கஜன் இராமநாதன் 100 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு கோரி கடிதம் அனுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தகது.
கருத்துக்களேதுமில்லை