சென்னை நோக்கி பயணித்தது சிறப்பு விமானம்!
இந்தியாவில் நிர்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவருவதற்காக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானமொன்று சென்னை நோக்கி பயணித்துள்ளது.
ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் U L 1121 எனும் விமானம் இன்று காலை 7.25 இற்கு சென்னை நோக்கி பயணித்துள்ளது.
குறித்த விமானத்தில் பயணிகள் இன்றி விமான பணியாளர்கள் மாத்திரமே பயணித்துள்ளனர்.
குறித்த விமானம் இன்று முற்பகல் 11.25 இற்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையுமென தெரிவிக்கப்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை