சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு சலூன் கடை உரிமையாளர்களிடம் தெரிவிப்பு,மீறும் பட்சத்தில் கடை இழுத்து மூடப்படும் ,டாக்டர் அஜீத் கடும் எச்சரிக்கை…

ஹஸ்பர் ஏ ஹலீம்_

கிண்ணியாவில் உள்ள  சலூன் கடை உரிமையாளர்களுக்கான கொவிட் -19 பரவுதை தடுத்தல் பற்றிய கலந்துரையாடல் இடம் பெற்றது. குறித்த கலந்துரையாடலானது இன்று(12) கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி  காரியாலயத்தில் நடைபெற்றது.

இது  விடயமாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.எம்.அஜீத் அவர்களினால் சுகாதார அமைச்சின் சுற்று நிறுபத்திற்கு அமைய சலூன் கடைகள் நடாத்தப்பட வேண்டும் என்றும்  தவறும் பட்சத்தில் மூட நடவடிக்கை    எடுக்கப்படும் என்றும் சலூன் கடை உரிமையாளர்களை இதன் போது கேட்டுக் கொண்டார்.
கொவிட்19 தொற்று பரவுதலை முற்கூட்டியே தடுப்பு நடவடிக்கையாகவும் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் மேலும் தெரிவித்தார்.

இதில் சலூன் கடை உரிமையாளர்கள்,பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.