வேன் லொறி நேருக்கு நேர் மோதி விபத்து இருவர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதி…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் குடாகம பகுதியில் வேன் ஒன்று சிறிய ரக லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ்செய்த இருவர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (12) திகதி மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கம்பளை பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கி சென்றுக்கொண்டிருந்த வேன் ஒன்றும் நுவரெலியாவிலிருந்து நோர்வூட் பகுதியினை நோக்கி சென்று கொண்டிருந்த சிறிய ரக லொறி ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளரியுள்ளன.
குறித்த விபத்து வேன் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் காரணமாக ஏற்பட்டிருப்பதாக ஹட்டன் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.
இவ் விபத்தினால் இரண்டு வாகனங்களுக்கும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.