இலங்கையில் ஒரேநாளில் 26 பேருக்குத் தொற்று!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 889ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே இன்று 21 பேருக்கு தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போது ஐவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மொத்த தொற்றாளர்கள் 889 பேரில் 366 பேர் பூரண குணமடைந்துள்ளார்கள் என்பதுடன் 514 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றார்கள்.
இதேவேளை, இலங்கையில் வைரஸ் தொற்றால் இதுவரை 9 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை