தேர்தலை நடத்தாது பாத்திருக்க முடியாது – திஸ்ஸ விதாரண
கொரோனா வைரஸ் இன்னும் இரண்டு ஆண்டுகள் கூட நீடிக்கலாம். அதுவரை தேர்தலை நடத்தாது பாத்திருக்க முடியாது என லங்கா சம்சமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் கடந்த காலத்தில் அப்போதைய அரசாங்கதின் மீதான நம்பிக்கை இல்லாத காரணத்தினால்தான் இருந்த அரசாங்கத்தை மாற்றுவதற்கான ஆணையாகவே கடந்த உள்ளூராட்சி தேர்தலிலும், ஜனாதிபதி தேர்தலிலும் மக்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர் என சுட்டிக்காட்டினார்.
எனவே தற்போது பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதுமட்டும் அல்ல இவ்வாறான வைரஸ் தொற்றுப்பரவல் நெருக்கடியில் கூட தென்கொரியாவில் தேர்தல் இடம்பெற்றுள்ளது. இது அனைவருக்கும் நல்லதொரு எடுத்துகாட்டாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை