மதுபான சாலைகளைத் திறக்க அனுமதி
ஊரடங்கு தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் மதுபான சாலைகளை இன்று (புதன்கிழமை) முற்பகல் 11 மணிக்கு திறக்க மதுவரித் திணைக்களம் அனுமதியளித்துள்ளது.
மேலும் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ள கொழும்பு கம்பாஹாவில் உரிமம் பெற்ற பல்பொருள் அங்காடிகள் உள்ள மதுபானசாலைகளில் விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மதுபான சாலைகளில் இன்றைய தினம் பின்பற்றப்படும் நடைமுறைகள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு வரும் நாள்களில் முடிவெடுக்கப்படும் என்று மதுவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை