கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 915 ஆக அதிகரிப்பு!
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 915ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 893 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் புதிதாக மேலும் 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 524 பேர் இதுவரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன், 382 பேர் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர் என்பதுடன், 09 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை