விமான நிலையம் செல்ல புதிய வீதியொன்று திறப்பு!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்காக புதிய நெடுஞ்சாலையொன்று இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இரு ஒழுங்கைகள் வீதம், இரு திசைகளிலும் பயணிக்கக் கூடிய, நான்கு ஒழுங்கைகளைக் கொண்ட இந்த வீதி 600 மீற்றர் நீளம் கொண்டதாகும்.
இப்புதிய நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்காக 600 மில்லியன் ரூபாவை வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் செலவிட்டுள்ளது.
இப்புதிய நெடுஞ்சாலையை 03 மாதங்களினுள் வீதி அபிவிருத்தி அதிகாரசபை நிர்மாணித்துள்ளது.
விமான நிலையத்திற்கு முன்பாக தற்போதுள்ள நெடுஞ்சாலை வழியாக தினமும் சுமார் 26 ஆயிரம் வாகனங்கள் பயணிக்கின்றன.
இதன் காரணமாக விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில் தினமும் அதிகளவான போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்றது. அவ்வாறு வாகன போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த குறித்த நெடுஞ்சாலை ஒரு தீர்வாக அமைந்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை