கொரோனா வைரஸூற்கெதிரான ‘நோய் எதிர்ப்பு சக்தி’ கொண்டிருப்பவர்களின் ஆய்வு முடிவு!

கொரோனா வைரஸூற்கெதிரான (கொவிட்-19) ‘நோய் எதிர்ப்பு சக்தி’ கொண்டிருப்பவர்கள் குறித்த ஆய்வு முடிவினை ஸ்பெயின் வெளியிட்டுள்ளது.

அண்மையில் மேற்கொண்ட இந்த ஆய்வு குறித்து ஸ்பெயினின் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் சுமார் 60,000 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஸ்பெயினில் மெட்ரிட் நகரம் உட்பட நான்கு நகரங்களில் 10 சதவீதத்திற்கு மேலான மக்கள் கொரோனா வைரஸை எதிர்ப்பதற்கான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளனர். இதில் எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 2.5 சதவீதம் பேர் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளனர்’ என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் தொற்று மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்து வருவதைத் தொடர்ந்து ஜூன் மாத இறுதி வரை நான்கு கட்டங்களாக ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது.

இதன்படி, கடந்த மார்ச் மாதம் 14ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட முடக்க நிலையில், சில கட்டுப்பாடுகள் மே 4ஆம் திகதி தளர்த்தப்பட்டது.

இதற்கமைய, முதல் கட்டமாக சிகை அலங்காரக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்படும். கடந்த 11ஆம் திகதி மதுபான கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டன.

வைரஸ் தொற்று வீதம் மதிப்பிடப்பட்டு அடுத்தக்கட்ட தளர்வுகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என அரசு தெரிவித்துள்ளது.

ஸ்பெயினில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 271,095 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 27,104பேர் உயிரிழந்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.