1330 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் வவுனியாவில் ஒருவர் கைது!
முச்சக்கர வண்டியில் கொண்டு செல்லப்பட்ட 1330 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வன்னி பிராந்திய போதை ஒழிப்பு பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரில் இருந்து கெப்பறிப்பொலவா பிரதேசத்திற்கு விற்பனைக்காக முச்சக்கர வண்டி ஒன்றில் 1330 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், இலங்கை விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வன்னிப் பிராந்திய போதை ஒழிப்பு பிரிவு பொலிசார் குறித்த முச்சக்கர வண்டியை மடுகந்த பகுதியில் வைத்து மறித்து சோதனையிட்டனர்.
இதன்போது குறித்த முச்சக்கர வண்டியில் 1330 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன், அதனைக் கொண்டு சென்ற முச்சக்கர வண்டி சாரதியான 36 வயதுடைய கெப்பற்றிப் பொலவா பகுதியைச் சேர்ந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள வன்னிப் பிராந்திய போதை ஒழிப்பு பிரிவு பொலிசார் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை