லண்டனிலும் கொரோனாவுக்கு பலியான யாழ்ப்பாண தமிழர்

லண்டனில் கொரோனா தொற்றால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் குரும்பசிட்டியைச்சேர்ந்த கிருஷ்ணபிள்ளை சத்தியயோகன் (வயது 55) என்ற மூன்று பிள்ளைகளின் என்ற குடும்பஸ்தரே மரணமடைந்தவராவார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 35 நாட்களாக மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்றுபுதன்கிழமை இவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை நேற்றுமுன்தினம் பெல்ஜியத்திலும் யாழ்ப்பாணம் மயிலிட்டியைச்சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.