மலையகத்தில் மாற்றத்தினை ஜனாதிபதி கோட்டபாய ராஜபகச அவர்களால் தான் ஏற்படுத்த முடியும். நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரன் தெரிவிப்பு…
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்
மலையகத்தில் மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என்றால் அது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் மூலம் முடியும் என நுவரெலியா மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் முத்தையா பிரபாகரன் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காணரமாக தோட்டப்பகுதிகளில் பாதிப்புக்குள்ளாகியுள்ள ராணிவத்த, லிந்துல, நாகசேன, குட்டிமலை, என்போல்ட், மெராயா, வூட்லக் அகரகந்த அக்கரபத்தனை உள்ளிட்ட தோட்டங்களைச் சேரந்த சுமார் 500 குடும்பங்களுக்கு அரசி மற்றும் பிஸ்கட் ஆகியன வழங்கி வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் .நான் அரசியலுக்கு வருவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை ஜனாதிபதியின் சேவை காரணமாக தான் நான் அவரது வேட்பாளராக இங்கு வந்திருக்கிறேன். இன்று இந்த கொரோனா பிரச்சினை காரணமாக முழு உலகமும் பாதிப்புக்குள்ளாகியுள்ள. எமது நாடும் பாதிக்கப்பட்டள்ளது இன்று இங்கு கொரோனா நோயாளர்கள் இல்லாவிட்டாலும் கூட எமது மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்கள் பலர் வேலையிழந்துள்ளதுடன் எதனையும் செய்ய முடியாத அளவிற்கு பொருளாதார ரீதியாக பின் தள்ளப்பட்டுள்ளார்கள்
அவர்களுக்காக அரசாங்கம் இன்று 5000 கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுத்திருக்கிறது அது மூன்று கட்டங்கள் நிறைவு பெற்ற நிலையிலும் தொடர்ந்தும் பெற்றுக்கொடுக்கப்படுகிறது நான்காம் கட்டமாகவும் பெற்றுக்கொடுக்கப்படும் ஆகவே உங்களுக்கும் அது கிடைக்கும்.
இன்று அமெரிக்காவினை எடுத்து கொண்டால் ஒரு நாளைக்கு 2500 பேர் சாகின்றார்கள் ஆனால் இலங்கை எடுத்துக்கொண்டால் இது வரை 09 பேர் தான் இறந்துள்ளார்கள். இதற்கு ஜனாதிபதி முன்னெடுத்த வேலைத்திட்டம் தான் காரணம் அதற்கு நாம் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.அத்தோடு படை வீரர்கள் எமக்காக சென்று இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்கள் எங்களை காப்பதற்காக சென்று இன்று அவர்கள் இந்த நோய்க்கு ஆளாகியிருக்கிறார்கள் அதனால் அவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே அவர்களுக்கும் இந்த நேரத்தில் நாம் நன்றி கூற வேண்டும்.அதே நேரம எமது மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மிக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்வதோடு இன்று நாங்கள் ஒரு சிறிய உதவியினை செய்வதற்காகவே இங்கு வந்துள்ளோம். முதல் கட்டமாக கொதம்மலையில் ஆரம்பித்தோம் இன்று இங்கு பெற்றுக்கொடுத்திருக்கிறோம் இது மாவட்டம் முழுவதும் இந்த நிவாரண பணி முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை