சற்று முன் வவுனியா குருமன்காட்டு சந்தியில் மோட்டார் சைக்கில் விபத்து : இருவர் காயம்…

வவுனியா குருமன்காட்டு சந்தி , புகையிரத நிலைய வீதியில் இன்று (15.05.2020) மாலை 3.45 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.

குருமன்காட்டு பகுதியிலிருந்து புகையிரத நிலைய வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணத்த மோட்டார் சைக்கில் எதிரே வந்த பாரவூர்தியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதுடன் அதே திசையில் பயணித்த மகேந்திரா ரக கேப் வாகனத்துடனும் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிலை (விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கில்) போக்குவரத்து பொலிஸார் துரத்தி வந்தமையினால் இவ் விபத்து நேர்ந்ததாக விபத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததுடன் விபத்து இடம்பெற்று சில வினாடிகளில் போக்குவரத்து பொலிஸார் மோட்டார் சைக்கில் வந்தமையும் வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தின் சி.சி.ரி.வியில் பதிவாகியுள்ளது.

விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.