மதுபானச்சாலைகளை தொடர்ந்தும் மூடி கசிப்பு காச்சுவோரையும் தண்டிக்க வேண்டும்.
மதுபானச்சாலைகளை முழுமையாக மூடிவிடுவதே மக்களுக்கு ஆரோக்கியமாக அமையும், அதேவேளை பல இடங்களில் குடிசை கைத்தொழில் போன்று கசிப்பு காச்சும் இடங்களையும் அதற்கு துணைபோகும் நபர்களையும் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மதுபானசாலைகள் ஊரடங்கு சட்டம் தளர்தப்பட்ட நிலையில் மீண்டும் திறக்கப்பட்டமை தொடர்பாக மேலும் கூறுகையில்.
கொரோனா வைரஸ் நோயை விடவும் மதுபானங்கள் அருந்துவது மிகவும் உடல் நலத்துக்கு கேடான விடயமாகும். கடந்த மார்ச் 20,ம் திகதி தொடக்கம் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த காலத்தில் மதுபானசாலைகளும் பூட்டப்பட்டிருந்தத்தை பலரும் வரவேற்றனர் இதனால் குடும்ப வன்முறைகள் தேவையற்ற சண்டைகள் வாகன விபத்துகள் ஊர்களில் கூடும் களியாட்டங்கள் என பல தீய சம்பவங்கள் இல்லாமல் இருந்தன.
இருந்தபோதும் பல கிராமங்களில் வாவி ஒர பற்றைக்காடுகளிலும் சில வயல் சார்ந்த இடங்களிலும் கசிப்பு காச்சும் வீதம் அதிகரித்துள்ளதை காணமுடிந்தது. பல கிராமங்களில் பொலிசாரும் ஊர் இளைஞர்களும் பிரதேச செயலக அலுவலர்களும் கலால் திணைக்கள உத்தியோகத்தர்களும் இணைந்து அவ்வாறான இடங்களை சுற்றிவளைத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சட்டநடவடிக்கை எடுத்தபோதும் முழுமையாக கசிப்பு காச்சும் நடவடிக்கையை நிறுத்தமுடியஙில்லை.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கசிப்பு காச்சும் நபர்களுக்கு எதிராக பல பொலிஷ்நலைய அதிகாரிகள் சட்டநடவடிக்கை எடுக்கின்றனர் என்பது உண்மை.
ஆனால் சில பொலிஷ்நிலையங்களில் உள்ள பொலிஷ் அலுவலர்கள் சட்டநடவடிக்கை எடுக்கமுடியாமல் ஏனோதானோ என்ற மனநிலையில் அசண்டையுடன் உள்ளதாகவும் சிலர் கசிப்பு காச்சுவோர்களிடம் மறைமுகமாக பணத்தை பெற்று அவர்களை சட்டதடவடிக்கை எடுக்காமல் விடுவதாக பலர் எம்மிடம் குறை கூறியுள்ளனர் இதில் உண்மை இல்லாமலும் இல்லை.
பொதுவாக மதுபானம் அருந்துவது உடல்நலத்துக்கு கேடு என ஊடகங்களிலும் தொலைகாட்சிகளிலும் விளம்பரம் போட்டுவிட்டு மது அருந்தும் காட்சிகளை ஒளிபரப்பு செய்வது இன்னோர் வகையில் இளைஞர்களை மதுபானம் அருந்துவதற்கு ஊக்குவிப்பது போல் உள்ளது.
மதுபானம் அருந்துவதால் வறுமைநிலையை உண்டாக்கும் என்பதை தெரிந்தும் மதுமானம் அருந்தியே தினமும் பல கஷ்டத்துடன் வாழும் மனிதர்களை எவ்வாறு திருத்துவது என்ற கேழ்வி எழுகிறது.
கடந்த ஊரடங்கு சட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த மதுபான சாலைகள் கடந்த வாரம் திறக்கப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மதுபான சாலையில் ஒருநாள் மதுபான விற்பனையில்மட்டும் முப்பத்தி ஐந்து இலட்சம் (3500000) ரூபா மெறப்பட்டதாக அந்த மதுபான நிலைய உரிமையாளர் என்னிடம் தெரிவித்தார் இது மட்டக்களப்பில் உள்ள ஒரு மதுபான நிலையத்தில் கிடைத்த விற்பனைப்பணம் இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் ஏறக்குறைய 60, மதுபான சாலைகள் உள்ளன ஒரு மதுபானசாலையில் முப்பத்தைத்து இலட்சம் எனின் அறுபது மதுபான சாலைகளிலும் நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய 20 கோடிரூபா மதுபானத்திற்காக அன்றய ஒருநாளில் செலவு செய்யப்பட்டுள்ளது என்ற உண்மை தெரிகிறது.
கொரோனா நோய் தாக்கத்தால் பலரும் நிவாரணப்பொருட்களை பல இடங்களில் பலருக்கு வழங்கப்பட்டன அதில் ஒருசிலர் தமக்கு வழங்கிய 5,கி.கி.அரிசி பையை அப்படியே 400ரூபாவுக்கு விற்றுவிட்டு அந்தப்பணத்தை கொண்டு மதுபானம் வாங்கி அருந்திய மிக மோஷமான சம்பவங்களும் நடந்துள்ளன.
உணவு இல்லாவிட்டாலும் மதுபோதை இன்றிவாழமுடியாத நிலையில் பலர் உள்ளதை காணமுடிகிறது.
உண்மையில் அரசாங்கம் நினைத்தால் இவ்வாறான மதுபாவனையில் இருந்து மக்களை மீட்டு நல்வழிப்படுத்துவதற்கான நல்ல திட்டங்களை ஏற்படுத்தலாம் அதற்கு முன்னோடியாக மதுபானசாலைகளை கட்டம் கட்டமாக மாவட்டங்களில் இருந்து படிப்படியாக குறைப்பதுடன் கசிப்பு காச்சுவோருக்கு எதிராக மனச்சாட்சியுடன் மொலிசார் செயல்பட்டால் தடுக்கமுடியும் பொலிசாரே ஏதோ ஒருவகையில் சலுகைகளை பெற்று கசிப்பு காச்சுவோரை ஊக்கப்படுத்தினால் எப்படி தடுக்கமுடியும் எனவும் மேலும் கூறினார்.
கருத்துக்களேதுமில்லை