யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு – போதனாப் பணிப்பாளர்
யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், அது தொடர்பாக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்.போதனா வைத்திய சாலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த சில தினங்களாக மழையுடன் கூடிய கால நிலை காணப்படுகின்றன. இந்நிலையில் சங்கானை, உரும்பிராய் உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளான நோயாளிகள் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தும் முகமாக மக்கள் தமது வீட்டு சூழல்களை துப்பரவாக டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழல் இல்லாமல் பராமரிக்க வேண்டும். அதன் ஊடாகவே டெங்கு நோயில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்” என தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை