கடும் காற்றுடன் கூடிய அடை மழையால் மேபீல்ட் தோட்டத்திலுள்ள வீடொன்று முழுமையாக சேதம்!
(க.கிஷாந்தன்)
கடும் காற்றுடன் கூடிய அடை மழையால் நுவரெலியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட கொட்டகலை, மேபீல்ட் தோட்டத்திலுள்ள வீடொன்று முழுமையாக சேதமடைந்துள்ளது.
இன்று (16.05.2020) அதிகாலை 2 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிராந்திய அதிகாரிகள் தகவல் வெளியிட்டனர்.
வீட்டின் கூரைகள் காற்றில் முழுமையாக அள்ளுண்டு சென்றுள்ளன. முன்பகுதி சுவரும் இடிந்து விழுந்துள்ளது. எனினும், வீட்டில் இருந்த எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தெய்வாதீனமாக உயிர்தப்பினர்.
இவ்வீட்டில் வசித்த தாய் மற்றும் மகன்மார் மூவரும் அயலவர் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான வசதிகளை தோட்டநிர்வாகத்தினரும், கிராம சேவகரும் செய்து கொடுத்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை