மியன்மார், ஜப்பானில் சிக்கித்தவித்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிக்கித்தவித்த இலங்கையர்கள் மியன்மார் மற்றும் சிங்கப்பூரில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், மியன்மார் நாட்டுக்குச் சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக 74 இலங்கையர்கள் இன்று (சனிக்கிழமை) நண்பகல் 12.05 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

மேலும், தாயகம் திரும்பிய இவர்கள் அனைவரையும் கிருமித் தொற்று நீக்கம் செய்து தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு இராணுவத்தினர் அழைத்துச்செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, இந்நிலையில் ஜப்பானில் சிக்கித்தவித்த 235 இலங்கையர்கள் விசேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான UL-455 என்ற விசேட விமானம் மூலம் குறித்த 235 பேரும் ஜப்பானிலிருந்து அழைத்துவரைப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை குறித்த விமானம், 235 இலங்கையர்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.