சிறை வைக்கப்பட்டுள்ள ராஜிதவுக்கு நீதி வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து…
“ராஜபக்ச அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் நிகழ்ச்சி நிரலுக்கமையவே முன்னாள் சுகாதர அமைச்சர் ராஜித சேனாரத்ன கைதுசெய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார். எனவே, அவருக்கு நீதி கிடைக்க வேண்டும்.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நல்லாட்சி அரசை அமைக்க முன்னின்று செயற்பட்டவர்களை ஏதோவொரு காரணத்துக்காக இந்த அரசு கைதுசெய்து வருகின்றது. ஆனால், நீதிமன்றத்தின் நடுநிலையான தீர்ப்பின் பிரகாரம் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் வெள்ளை வான் கடத்தல் ஊடகவியலாளர் சந்திப்பு வழக்கில் இரண்டாவது தடவையாகக் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராஜித சேனாரத்னவுக்கும் விடுதலை கிடைக்கும் என்று நாம் நம்புகின்றோம்.
இந்தக் கைது நடவடிக்கை மூலம் அரசு அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றது. அந்த முயற்சியை நாம் தோற்கடிப்போம். ஏனெனில் நியாயமான நீதி எமது பக்கமே நிற்கும்” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை