வவுனியாவில் சிறுபோக நெற்செய்கை…

வவுனியாநிருபர்.
வவுனியா மாவட்டத்தில் தற்போது சிறுபோக நெற்செய்கையில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மாவட்டத்திலுள்ள பெரிய நீர்ப்பாசனக் குளங்கள் மற்றும் சிறு குளங்களின் கீழ் அனுமதிக்கப்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குளத்தின் நீர் மற்றும் மழையினை நம்பி ஆரம்பிக்கப்பட்ட சிறுபோக நெற்செய்கையானது தற்போது வீதியோரங்களில் செல்லும் வழியில் பார்வையிடுகையில் பச்சை பசேலென காட்சியளிப்பதுடன் அவ்விடத்தில் செல்லும் சமயத்தில் ஒர் குளிர்மையினான ஒர் மாற்றத்தினையும் உணரக்கூடியதாகவுள்ளது.

சிறுபோக நெற்செய்கைக்கான முதற்கட்ட மானிய உரம் விநியோகம் அந்தந்த கமலநல சேவை நிலையங்களின் ஊடாக விநியோகிப்பட்டும் வருகின்றது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.