ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை
கொரோனா தொற்று, நாட்டின் பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஆராயவுள்ளனர்.
அதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை (திங்கட்கிழமை) மாலை ஐந்து மணிக்கு கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.
இதன்போது, நாட்டின் தற்போதைய நிலவரம், எதிர்வரும் பொதுத் தேர்தல், கொரோனா வைரஸ் தொற்று, பொருளாதார முன்னேற்றம், அரசியல் நிலவரம் என்பன தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடக பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை