10 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய காலி, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, நுவரெலியா உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை