யுத்தத்தில் உயிரிழந்த எம் உறவுகளுக்காக அமைதியாகச் சுடர் ஏற்றி அஞ்சலிப்போம்! கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவிப்பு

மே 18 தமிழினத்தின் உரிமைக் கானவிடுதலைக்கான போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் பேர வலம் ஓர் ஆறாத வடு. அதில் தமது உயிர்களை ஆகுதியாக்கிய எமது உறவுகளை மே 18 – இன்று எமது வீடு ளில் சுபர்ஏற்றி அஞ்சலித்து அமைதியுடன் நினைவேந்துவோம்.

– இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –

இறுதிப் போரில் அரச படைகளின் பலவிதமான தாக்குதல்களினால் எமது உறவுகள் பலர் முள்ளிவாய்க்கால் மண்ணில் சாகடிக்கப்பட்டனர். சாட்சியங்கள் எதுவுமின்றி போர்விதிகளுக்கு முரணாக இறுதிப் போர் இந்த மண்ணில் நடைபெற்றது.

மஹிந்த ஆட்சியில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் திட்டமிட்ட கொடூரத் தாக்குதல்கள் தொடர்பில் அப்போது நான் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியிருந்தேன். போரை உடன் நிறுத்தும்படியும் ஆட்சியில் இருந்த அரசைக் கோரினேன். ஆனால், தமிழ் மக்களுக்குப் பெரிய இழப்புகளைக் கொடுத்துத்தான் அரசுபோரை முடிவுக்குக் கொண்டுவந்தது. 

பெருந்தொகையான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர், பலர் காணாமல் ஆக்கப்பட்டனர். எமது மக்களின் சொந்த வீடுகள், சொத்துக்கள் அழிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தருமாறு சர்வதேச சமூகத்தை இன்று நாம் கோரி நிற்கின்றோம்.

தமிழின அழிப்புத் தினமாகவும், தமிழ்த் தேசிய துக்க நாளாகவும் இன்று (மே 18) அறிவிக்கப்பட்டுள்ளது. முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வருடந்தோறும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும். இதில் தமிழ்  மக்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள் என்று அனைத்துத் தரப்பும் ஒற்றுமையுடன் ஓரணியில் திரண்டு பங்கேற்பார்கள். ஆனால், நாட்டில் தற் போது உயிர்க்கொல்லி நோயான – தொற்று நோயான கொரோனாவைரஸ் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் கடந்த வருடங்கள் போன்று இவ்வருடமும் முள்ளிவாய்க்கால் நினை விடத்தில் அனைவரும் பங்கேற்று உயிரிழந்த எமது உறவுகளை நினைவு கூர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழர்கள் அனைவரும் இன்று மாலை 6 மணி தொடக்கம் 7 மணி வரையான காலப்பகுதியில் இறுதிப் போரில் இழந்த எமது உறவுகளை வீடுகளில் சுடர் ஏற்றி – அஞ்சலி செலுத்தி நினைவுகூர வேண்டும். இவ்வாறு நாம் செய்வதன் ஊடாக போரின்போது உயிரிழந்த எமது உறவுகளின் ஆத்மா சாந்தியடையும் – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.