கொழும்பில் நிர்க்கதியான அம்பாறையை சேர்ந்த 12 பேரை அழைத்து வந்த முன்னாள் எம்.பி வியாளேந்திரன்

பாறுக் ஷிஹான்

கொரோனா  வைரஸ் அனர்த்தம் காரணமாக   பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் விளைவாக தொழிலுக்காக கொழும்பு சென்று சொந்த இடத்திற்கு  திரும்ப முடியாமல் பரிதவித்த  அம்பாறை  மாவட்டத்தை சேர்ந்த 12  பேர்  மீள அழைத்து  வரப்பட்டனர்.

கொரோனா  வைரஸ் அனர்த்தம் காரணமாக   பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் விளைவாக தொழிலுக்காக கொழும்பு சென்று சொந்த இடத்திற்கு  திரும்ப முடியாமல் பரிதவித்த  அம்பாறை  மாவட்டத்தை சேர்ந்த பெரிய நீலாவணை பாண்டிருப்பு அன்னமலை சம்மாந்துறை அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்தவர்களை  மீள அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரன்  மேற்கொண்டிருந்தார்.

இதனடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை(17) மாலை தனியார் பேரூந்து மூலமாக கொழும்பில் இருந்து அழைத்து வந்த அவர் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு 12 நிர்க்கதியான மக்களை ஒப்படைத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது

கொழும்பில் நிர்க்கதியான குறித்த 12 பேரும் முகநூல்கள் நண்பர்கள் வாயிலான விடுத்த வேண்டுகோளினை கருத்திற்கொண்டு சமூக சேவகர்களான வைத்தியர் ஆதர்சன் சிவதர்சன் நடராசா பிரசாந் ஆகியோர்  என்னை  தொடர்பு கொண்டு நிர்க்கதியான மக்களை சொந்த இடத்திற்கு அழைத்துவர முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டனர்.
அதன் பிரகாரம் இந்த அசாதாரண சூழ்நிலையில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட  மக்களுக்கு உதவும் வகையில்  மேற்கூறிய சமூக சேவகர்களின் கோரிக்கையை   இணங்கவே  இந்த ஏற்பாடுகளை  மேற்கொண்டேன். இதனை கேள்வியுற்ற நிர்க்கதியானவர்கள்  இவர்களின் ஊடாக என்னை  தொடர்பு  ஏற்படுத்திய வண்ணம் இருந்தனர்.இவ்வாறு கொழும்பில் வேலைக்காக சென்று நிர்க்கதியானவர்கள்  தொடர்பாக 10 ஆம் கட்ட நடவடிக்கை ஊடாக இவர்களை மீட்டுள்ளேன் என்றார்.தொழில் இன்மையாலும்  உணவுத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான உணவகங்கள் இன்மையாலும் பெரும் அசௌரியங்களை எதிர்கொண்டதை அறிவேன் என்றார்.

அழைத்து வரப்பட்ட மக்களில் ஒருவர் தனது கருத்தில்

கொழும்பில் நிர்க்கதி நிலையில் இருந்த 12 பேரை மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரன்  சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.அதற்கு முதற்கண் நன்றிகளை தெரிவிக்க விரும்புகின்றேன்.

இந்த அசாதாரண சூழலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் தொழிலுக்காகவும் இதர தேவைகளுக்காகவும் சென்ற எம்மை போன்ற  மட்டக்களப்பு   அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த பலர் ஊரடங்கு அறிவித்தல் காரணமாக மிகவும் நிர்க்கதி நிலைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

தொழில் இன்மையாலும்  உணவுத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான உணவகங்கள் இன்மையாலும் பெரும் அசௌரியங்களை எதிர்கொண்டனர்.

இது தொடர்பில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சமூக சேவகர்களான வைத்தியர் ஆதர்சன் சிவதர்சன் நடராசா பிரசாந் ஆகியோர்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரனின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து உடனடியாக அவர்கள் இருக்கும் இடத்திற்கு தனது பாதுகாப்பு அதிகாரிகளை அனுப்பி உணவு உட்பட அத்தியாவசிய தேவைகளை நிவர்த்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தந்திருந்தார்.

அத்துடன்  கடந்த சில தினங்களுக்கு முன்னர்  பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு எங்களது  நலன்தொடர்பில் விளக்கியதோடு  உடனடியாக எங்களை    சொந்த பிரதேசங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான விசேட அனுமதியினை பெற்று அதற்கான ஏற்பாடுகளையும் செய்து தந்திருந்தார்

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தை  சேர்ந்த இலகு பஸ் உரிமையாளர் ஒருவரை தொடர்புகொண்டு குறித்த மன்னாள் பாராளுமன்ற உறுப்பினரே  பொலிஸாரின் விசேட அனுமதியுடன் எங்களை  அனுப்பி வைப்பதற்கான அனைத்து விடயங்களையும் பொறுப்பேற்றிருந்தார்கள்  இவ்வாறான மனிதாபிமான செயற்பாட்டிற்கு அவருக்கு நிகர் அவரே தான் என குறிப்பிட்டார்.

இன்றைய தினம்   அம்பாறையைச் சேர்ந்த 12பேர் தங்களது குடும்பங்களுடன் வந்து இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.