அரசியல் கைதிகளின் விடுதலை – ஜனாதிபதியை சந்திக்கின்றது கூட்டமைப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, எதிர்வரும் சில தினங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து விவாதிக்க உள்ளது.
இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கட்சியின் உறுப்பினர்களில் ஒருவர் ஜனாதிபதியை சந்திப்பார் எனக் கூறியுள்ளார்.
“இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் ஏற்கனவே பிரதமருடன் கலந்துரையாடினோம், விரைவில் ஜனாதிபதியையும் சந்திப்போம். விரைவில் சாதகமான முடிவு எடுக்கப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (12), யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், பிரதமரைச் சந்தித்து அரசியல் கைதிகளின் விவரங்கள் தொடர்பான ஆவணங்களை கையளித்தார்.
இந்த ஆவணத்தில் 96 அரசியல் கைதிகளின் விவரங்கள் இருந்தன எனினும் அவர்களில் 47 பேரின் விடுதலைக்கு ஜனாதிபதி மன்னிப்பு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை