திருக்கோவில் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இராணுவத்தினர் , பொலிஸாரினது கெடுபிடியுடன்….
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று(18) திருக்கோவில் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் இராணுவத்தினர் , பொலிஸாரினது கெடுபிடியால் தடுத்து நிறுத்தப்பட்டது.
ஏற்பாட்டாளரின் வீட்டுக்கு சென்ற இராணுவத்தினரும் பொலிஸாரும் வ இராணுவ புலனாய்வாளர்களும் , நினைவேந்தல் பதாகையை பறித்து கொண்டு அச்சுறுத்தல் விடுத்து சென்றதாக எம்மிடம் தெரிவித்தார் .
இதனை தொடர்ந்து வீட்டில் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது .
கருத்துக்களேதுமில்லை