கிளிநொச்சியில் சிறிதரன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டிலும் இடம்பெற்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகத்தில் குறித்த  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு18.05.2020 இன்று பிற்பகல் 5.30 மணிக்கு  உணர்வுபூரவமாக நடைபெற்றுள்ளது. நாட்டில் தற்போதுள்ள கோரோனா தொற்று அபாயநிலையினைக் கருத்திற்கொண்டு சமூக இடைவெளி பேணப்பட்டு, கைகள் சுத்தப்படுத்தப்பட்டு பாதுகாப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பிரதான சுடர் ஏற்றப்பட்டதை அடுத்து நினைவு சுடர்களும் ஏற்றப்பட்டன. தொடர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மலர் வணக்கமும் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன்,பிரதேச சபை உளுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.