திருகோணமலையில் வறுமை கோட்டின் கீழ் வாழும் நூறு குடும்பங்களுக்கான நிவாரண உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு…
சேர்விங் ஹியுமானிட்டி அமைப்பின் கொவிட் 19 நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் திருகோணமலை சர்வமத பேரவையின்(எல் ஐ ஆர் சி) இன் ஏற்பாட்டில் திருகோணமலை விபுலானந்தா பாடசாலை மைதானத்தில் இன்று(19) வறுமை கோட்டின் கீழ் வாழும் நூறு குடும்பங்களுக்கான நிவாரண உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன
இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள், எஸ் எச் எப் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எம்.அன்சாரி திருகோணமலை பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஜெஸ்மின் ராணி ,மத தலைவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி நிவாரண உதவி இரண்டாம் முறையாக சேர்விங் ஹியுமானிட்டி நிதி ஒதுக்கீட்டில் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
கருத்துக்களேதுமில்லை