நாட்டின் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மீள் அறிவித்தல் வரை நீடிப்பு

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மீள் அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இரத்தினபுரி, காலி, கேகாலை, குருநாகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தின் பத்தேகம பிரதேச செயலாளர் பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியெல்ல, கலவான, நிவித்திகல, எலபாத்த, இரத்தினபுரி மற்றும் பெல்மடுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கேகாலை மாவட்டத்தின் புளத்கொஹுபிட்டிய, வறக்காபொலை, றம்புக்கண, கலிகமுவ, கேகாலை மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், குருநாகலை மாவட்டத்தின் மாவத்தகம மற்றும் பொல்கஹாவெல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ கோரளை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காலி, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, கொழும்பு, கேகாலை, மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தின், கடவத்சதர, அக்மீமன, எல்பிட்டிய, நியகம, நாகொட, தவலம, நெலுவ மற்றும் போப்பே போத்தல ஆகியபிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், மாத்தளை மாவட்டத்தின் உக்குவெல பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, இரத்தினபுரி மாவட்டத்தின், எஹெலியகொட, குருவிட்ட, அயாகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின், அகலவத்த, பாலிந்த நுவர, புளத்சிங்ஹல, வலல்லாவிட்ட, ஹொரண, இங்கிரிய மற்றும் மத்துகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாத்தறை மாவட்டத்தின், பிட்டபெத்தர மற்றும் கொடபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்க பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, யட்டியாந்தோட்டை மற்றும் தெரணியகலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்டி மாவட்டத்தின், கங்கஹல கோரளை மற்றும் தும்பனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மலைப்பாங்கான பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாமைத்து மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.