பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல் வெளியானது!

பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களின் அனுமதிப்பத்திரங்களை அத்தாட்சிப்படுத்துவதற்காக 3 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 20, 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் அனுமதிப்பத்திரங்களை அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு, பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு இணங்க இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.