மங்கள சமரவீர இரண்டாவது தடவையாக சி.ஐ.டி.யில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் மீண்டும் ஆஜராகியுள்ளார்.

2019 ஜனாதிபதி தேர்தலின்போது வாக்காளர்களை அழைத்து வருவதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக இம்மாதம் 14 ஆம் திகதியும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.