வெள்ளநீர் புகுந்ததால் 50 இற்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு…

(க.கிஷாந்தன்)

அடை மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட கொட்டகலை, லொக்கீல் பகுதியில் 180 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளநீர் புகுந்ததால்  50 இற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவு சேமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடமொன்றில், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளை கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் முன்னெடுத்து வருகிறார்.

அத்துடன், வெள்ளநீர் வழிந்தோடக்கூடிய வகையில் கனரக வாகனங்களைப் பயன்படுத்தி வடி காண்கள் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன.

கிராம உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.