முகநூலில் பரப்பட்ட போலியான தகவலினால் யாழில் குடும்பஸ்தர் தற்கொலை
முகநூலில் பரப்பட்ட போலியான தகவலினால், குடும்பஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணம் நாவற்குழி பாலத்திற்கு அருகாமையில் உள்ள வெற்றுக் காணியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருமணமாகி ஒரு குழந்தையின் தந்தையாரான குறித்த நபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக, போலி முகநூல் கணக்கில் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, ஏற்பட்ட மனவிரக்தியில் இந்த தற்கொலை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை