வாலிபர் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நிகழ்வு மாவிட்டபுரத்தில்!
முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வாலிப முன்னணியால் நேற்று மாவிட்டபுரத்தில் நடத்தப்பட்டது.
வாலிப முன்னணி தலைவர் க.பிருந்தாபன் தலைமையில் மாவிட்டபுரத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைக் கிளை அலுவலகத்தில் மேற்படி நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசா, புளொட் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், வலி.வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சோ.சுகிர்தன், வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொருளாளர் பெ.கனகசபாபதி, வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களான க.மயூரதன், சே.கலையமுதன், செ.விஜயராஜ் ஆகியோரும் கலந்து உயிர்நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கருத்துக்களேதுமில்லை