சீரற்ற வானிலையால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்
சீரற்ற வானிலையால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
முப்படையினர், பொலிஸார், அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்தியநிலைய அதிகாரிகள் 24 மணித்தியாலங்களும் தமது பணிகளை நிறைவேற்ற தயார்நிலையில் உள்ளனர்.
117 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மும்மொழிகளிலும் முறைபாடுகளை மேற்கொள்ள முடியும். காலநிலை அறிக்கைகளுக்கு அமைய மத்திய மலைநாட்டு பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது.
அதற்கமைய மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலத்தில் வெடிப்பு, திடீரென உருவாகும் நிரூற்றுக்கள், சுவர்களில் வெடிப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களில் தேசிய அனர்த்த முகாமைத்துவம் வழங்கியுள்ள அறிவுறைகளை பின்பற்றுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை