நாவிதன்வெளி திருவானூர் விஞ்ஞான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
நாவிதன்வெளி திருவானூர் விஞ்ஞான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (19) காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வேப்பையடி வைத்தியசாலையில் சமுக இடைவெளியை பேணியவாறு இரத்த தான முகாம் ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
இவ் இரத்ததான பணியில் குருதிக் கொடையாளர்கள் அதிகளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.மேலும் இதனை ஏற்பாடு செய்தவர்கள் கருத்து தெரிவிக்கையில் நாட்டில் நிலவும் அவசரகால நிலமைகளில் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினையாக குருதித் தட்டுப்பாடு நிலவுகின்றது. அதனை நிவர்த்தி செய்யும் சிறு முயற்சியாக நாம். மீண்டும் ஒரு இரத்ததான முகாம் ஒன்றை சமுக இடைவெளியை பேணியவாறு ஒழுங்கமைத்துள்ளதாக குறிப்பிட்டனர்.
இந்நிகழ்வில் நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜெ.மதன் கல்முனை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் என். ரமேஷ் நாவிதன்வெளி திருவானூர் விஞ்ஞான மாணவர் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை