விட்டா எல்லாம் இந்தியன் 2 படத்தை முடிச்சு கட்டிடுவாங்க போல.. சர்ச்சைகளுக்கு சங்கு ஊதிய படக்குழு
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன்2. லைகா புரோடக்சன்ஸ் இந்த படத்தை மிகப் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஏனெனில் இந்தியன் 2 படப்பிடிப்பில் சமீபத்தில் ஏற்பட்ட கிரேன் விபத்து காரணமாக மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் இந்திய சினிமா உலகையே அதிர வைத்தது. அதுமட்டுமல்லாமல் மேலும் 10 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு பல நாட்கள் ஷூட்டிங் நடக்காமல் இருந்தது. அதேபோல் சபாஷ் நாயுடு எனும் படப்பிடிப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக காலில் அறுவை சிகிச்சை செய்த கமலுக்கு மீண்டும் வலி ஏற்பட்டதால் அதில் சில காலம் படப்பிடிப்பு தடைபட்டது.
கொரானா காரணமாக எந்த ஒரு படப்பிடிப்பும் நடைபெறவில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்நிலையில் இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் டிராப் செய்ததாகவும், சன் பிக்சர்ஸ் அந்த படத்தை கைப்பற்றியதாகவும் பல வதந்திகள் கிளம்பின.
இப்படியே விட்டா இந்தியன் 2 படத்தின் சோலியை முடித்து விடுவார்கள் என்று போஸ்ட் புரடக்ஷன்ஸ் பணிகள் துவங்கலாம் என்று அரசு அறிவித்ததை ஒட்டி முதன்முறையாக துவங்கப்பட்ட பணிகள் இந்தியன் 2 படத்தினுடையது தான்.
அதுமட்டுமில்லாமல் இரண்டு இடங்களில் இந்த படத்தின் எடிட்டிங் பணிகள் நடந்து வருகிறதாம். பல்லாவரம் அருகே உள்ள பின்னி மில்லில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை