“வேண்டாம் சுமந்திரன்” கிளிநொச்சி வீதிகளில் வீசப்பட்டுள்ள துண்டுப்பிரசுரங்கள்

கிளிநொச்சி வீதிகளில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்ஏ.சுமந்திரனுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் சிங்கள் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தை அவர் கொச்சைப்படுத்திவிட்டார் என பல தரப்பிலிருந்து எதிர்ப்புக்களும் கண்டனங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்றைய தினம் கிளிநொச்சி வீதிகளில் சுமந்திரனுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை கிளிநொச்சியின் வீதியெங்கும் இத் துண்டுப் பிரசுரங்கள் காணப்பட்டுள்ளன.

வேண்டாம் சுமந்திரன் எனும் தலைப்பில், தமிழர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்திய சுமந்திரனை தோற்கடிப்போம் என எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்களே வீதிகளில் வீசப்பட்டுள்ளன.

துண்டுப் பிரசுரத்தின் கீழே தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் கிளிநொச்சி மக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.