பாடசாலை மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமா?

ஜே.எப்.காமிலா பேகம்

பாடசாலைகள் திறந்த பின் மாணவர்கள் முகக்கவசங்களை அணிந்து வருவது கட்டாயப்படுத்தப்படாது என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் ஒழிப்பு பற்றிய முக்கிய சந்திப்பு நேற்று மாலை சுகாதார அமைச்சில் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் நடந்தது.

இதில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம், சந்தையில் பலவித முகக்கவசங்கள் இருப்பதோடு சிறுவர்கள் கூடிய நேரம் அவற்றை அணிந்திருந்தால் சுவாசிக்க சிரப்பப்படுவர்கள். அதுமட்டும் அன்றி வேறு நோய்களும் ஏற்படலாம் என்று டாக்டர் பலிஹவடன கூறினார்.

இதனால் மாணவர்கள் பாடசாலைக்கு வருகையில் மற்றும் வீடு திரும்புகையில் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.