கோட்டாவின் உரை அருவருப்பானது பொறுத்திருந்து பதில் வழங்குவேன்! சம்பந்தன் காட்டம்
போர் வெற்றி விழா என்ற பெயரில் அரசு நடத்திய நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய அருவருப்பான உரைக்கு நான் பொறுத்திருந்து உரிய பதிலை வழங்குவேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
படையினரைக் கெளரவிக்கும் அரசின் போர் வெற்றி விழா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய ஜனாதிபதி, ‘எம்மைப்போன்ற ஒரு சிறிய நாட்டில் அர்ப்பணிப்புகளைச் செய்துள்ள படைவீரர்கள் தேவையற்றஅழுத்தங்களுக்கு உள்ளாக நான் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை.
எமது நாட்டுக்கு அநீதியான வகையில் ஏதேனும் ஒரு சர்வதேச நிறுவனம் அல்லது அமைப்பு தொடர்ந்தும் செயற்படுமாக இருந்தால் அந்த நிறுவனத்தின் அல்லது அமைப்பின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக்கொள்ள நான் ஒருபோதும் பின் நிற்கப்போவதில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் தங்கள் நிலைபாடு என்னவென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை தொடர்பில் பேசிய அவர், இது தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கூட்டமைப்பு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை