கல்முனையில் கஞ்சாவுடன் கைதான பெண் வியாபாரி உட்பட நால்வருக்கு தண்டப்பணம் விதிப்பு

பாறுக் ஷிஹான்
கஞ்சாவுடன் கைதான  பெண் வியாபாரி உள்ளிட்ட நால்வருக்கு தலா ரூபா 9900 தண்டப்பணம் விதித்து கல்முனை  நீதிமன்று விடுவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை(20 ) முற்பகல் 10 மணியளவில் கல்முனை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை  வீதி கல்முனை 2 இல்  உள்ள வீடொன்றில் குடும்பம் ஒன்று  சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக   கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு   கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய   உப பொலிஸ் பரிசோதகர் அனுசன்  உள்ளிட்ட குழுவினர்  மேற்கொள்ளப்பட்ட  நடவடிக்கையினால் சந்தேக நபரான பெண் வியாபாரி  உள்ளிட்ட நால்வர்  செய்யப்பட்டதுடன்  வியாழக்கிழமை(21) கல்முனை  நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு ஆஜர்படுத்தப்பட்ட குறித்த பெண் வியாபாரி உள்ளிட்ட நால்வருக்கு தலா 9900 வீதம் மொத்தமாக   ரூபா 39 ஆயிரத்து அறுநூறு   தண்டப்பணம் செலுத்த கல்முனை  நீதிவான் நீதிமன்றத்தால்  உத்தரவிடப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.விடுதலை செய்யப்பட்ட குறித்த பெண் வியாபாரி உள்ளிட்ட நால்வரிடமும் இருந்து   1200  700 1400 650  மில்லி கிராம் கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைதாகி விடுதலையானவர்கள்   50, 30, 25 ,49, வயதினை உடையவர்கள் எனவும் இவ்வாறு கைதானவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உள்ளடங்குகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.