வவுனியாவில் பிரதேச சபை உறுப்பினரின் தலையீட்டால் மண் அகழ்வு நிறுத்தம்

வவுனியா – செட்டிகுளம் கல்நாட்டியில் மக்கள் விவசாயம் செய்யும் பகுதிக்கு அண்மையில் மேற்கொள்ளப்படும் மண் அகழ்வு, பிரதேச சபை உறுப்பினரின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

செட்டிகுளம் பிரதேச சபைக்குட்பட்ட கன்னாட்டி பகுதியிலுள்ள ஐந்து குளங்களின் கீழ் 320 ஏக்கர் பரப்பில் வேளாண்மை மேற்கொள்ளப்படுகின்றது.

குறித்த கிராமங்களில் வாழும் மக்கள் வாழ்வாதாரமாக விவாசாயத்தையே மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில் குறித்த பகுதியில் பல டிப்பர்களில் மண் அகழப்பட்டு வருகின்றது.

பர்ராஜகுளம், கொல்லங்குளம், துத்திக்குளம், மரக்காரம்பளை குளம், ஊறங்குளம் போன்ற ஐந்து குளங்களுக்கான நீர் கன்னாட்டி பகுதியில் இருந்தே செல்கிறது. இவ்வாறு மண் அகழப்படுவதால், இப்பகுதிகளில் நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகின்றது.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர் அலைக்ஸ் யூட் மண் அகழ்வில் ஈடுபடும் குறித்த நபர்களிடம் அனுமதி பத்திரங்களை காண்பிக்குமாறு கோரியபோது பிரதேச சபையின் அனுமதி இருந்திருக்கவில்லை.

எனவே, உடனடியாக உரிய முறையில் அனுமதியை பெறுமாறு கோரி மண் அகழ்வினை நிறுத்தியதையடுத்து அப்பகுதி மக்கள் அவ்விடத்திலிருந்து அகன்று சென்றனர்.

இவ் எதிர்ப்பு நடவடிக்கையில் செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர், கன்னாட்டி பிரதேச பங்குந்தந்தை, பிரதேச மக்கள், கிராம அமைப்புக்கள், கமக்கார அமைப்பினர் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.