கேப்பாப்புலவில் தனிமைப்படுத்தலில் இருந்த மேலும் இருவருக்கு கொரோனா தொற்று

கேப்பாப்புலவு விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று இருப்பதாக இனங்காணப்பட்ட 2 கடற்படையினரும் இன்று (சனிக்கிழமை) வெலிக்கந்த மருத்துவமனைக்கு சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு, விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படையினர் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மேலும் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த விமானப்படை தளத்தில் இதுவரையில் 10 பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.