இலங்கையர்களை அழைத்துவர பங்களாதேஷ் நோக்கி புறப்பட்டது விசேட விமானம்
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விசேட விமானமொன்று பங்களாதேஷ் நோக்கி புறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் பங்களாதேஷில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காக குறித்த விமானம் பங்களாதேஷ் நோக்கி புறப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் 1422 என்ற விமானமே இன்று (சனிக்கிழமை) பகல் 12.24 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விமானம் பங்களாதேஷில் சிக்கியுள்ள இலங்கையர்களுடன், இன்று மாலை 7.45 மணியளவில் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை