முஸ்லிம்கள் இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்

நாட்டின் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமையினால் இலங்கைவாழ் முஸ்லிம்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈதுல் பித்ர் எனப்படும் நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர்.

இஸ்லாம் சமூக ஒற்றுமையை வலியுறுத்துகின்றமையினால் ஏழைகளின் பசியை அறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற படிப்பினையை நோன்பு உணர்த்துகின்றது.

புனித ரமழான் மாதத்தில் விழித்திருந்து, பசித்திருந்து ஒரு மாதகாலமாக நோன்பு நோற்ற முஸ்லிம்கள் இன்று மனமகிழ்ச்சியுடன் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.

நோன்பானது ஒரு முஸ்லிமுடைய மனக் கட்டுப்பாட்டை உருவாக்கும் சிறந்த பயிற்சியாகவும் அமைந்துள்ளது.

வெறுமனே பசித்திருப்பதும் தாகித்திருப்பதும் மாத்திரமின்றி இந்த பயிற்சியின் மூலம் இறையச்சத்தை தன்னகத்தே வளர்த்துக் கொள்வதே நோன்பின் அடிப்படை நோக்கமாகும் என்று அல் குர்ஆன் தெளிவுபடுத்தியுள்ளது.

ரமழான் மாதத்தைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திற்கான தலை பிறை தென்பட்டதும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

முஸ்லிம்களின் இரண்டு பெருநாட்களில் ஒன்றே ஈதுல் பித்ர் எனப்படும் நோன்புப் பெருநாளாகும்.

0Shares

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.