காணாமல் போனவர் சடலமாக கண்டெடுப்பு!

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா ஆற்றிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கண்டெடுக்கப்படுள்ளது.

நேற்று முன்தினம் முதல் காணாமல்போயிருந்த கொட்டகலை, ரொசிட்டா, கங்கைபுரம் பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய செல்லமுத்து துரைராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் காணாமல் போயுள்ளமை குறித்து அவரின் உறவினர்களால் திம்புள்ள, பத்தன பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் இறங்கினர்.

இந்நிலையிலேயே இன்று மாலை 4.30 மணியளவில் சடலம் ரொசிட்டா ஆற்றங்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. இது தொடர்பில் பிரதேச வாசிகள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

மரண விசாரணைகளின் பின் சடலம் பிரதேச பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்திலும் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.