பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் ஹெரோயினுடன் கைது
25 வயதுடைய பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் பன்னல பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் வீரர் சில காலமாக ஹெராயினுக்கு அடிமையாகியிருந்த நிலையில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) 2.7 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவருடன் கைது செய்யப்பட்ட மற்றுமொருவரிடம் இருந்து 2.8 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் குறித்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இரண்டு சந்தேக நபர்களை குளியாபிட்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை