வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறப்பது குறித்து இறுதி முடிவில்லை..!
வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறப்பது குறித்து அரசாங்கம் இன்னும் இறுதி முடிவை எட்டவில்லை என புத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
காலை முதல் இரவு வரை அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட வேண்டும் என அமைச்சின் மேலதிக செயலாளர் கூறினார்.
இதேவேளை போயா தினங்களிலும் பௌத்த ஆலயங்களை மூடி வைக்க அரசாங்கம் ஒரு முடிவை எடுக்கக்கூடும் என்றும் இது இன்னும் இறுதிசெய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை